28 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரி

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளம் பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஏரி நிரம்பியது.நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்த இந்த ஏரியை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அக்ரஹார சாமக்குளம் ஏரி பாதுகாப்பு மற்றும் தன்னார்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து சுமார் நூறு வாரங்களுக்கு மேலாக ஞாயிற்றுக்கிழமைகளில் சீரமைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த கடந்த சில நாட்களாக கோவில்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கீரணத்தம்,கோவில்பாளையம்,எஸ்.எஸ் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரிக்கு ஐந்து குளங்களின் வழியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக 28 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரி மழை நீரால் ததும்பி நிற்கிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story