கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விளைச்சல் பாதிப்பு

கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விளைச்சல் பாதிப்பு

விற்பனைக்கு வந்த எலுமிச்சை பழம்

சேலத்தில் கோடை வெயிலால் எலுமிச்சை பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று முன்தினம் 108.2 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். அதேநேரத்தில் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய எலுமிச்சை பழத்தின் தேவைப்பாடு கோடை காலத்தில் அதிகரித்துள்ளது. பொதுமக்களும் எலுமிச்சை பழத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தான் எலுமிச்சை சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

இதனால் சேலம் மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து எலுமிச்சை பழம் தினமும் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தேவை அதிகரித்து உள்ளதால், கடந்த சில வாரங்களாக எலுமிச்சை பழத்தின் விலை படிப்படியாக அதிகரித்து உள்ளது. சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளிலும், வெளி மார்க்கெட்டிலும் கடந்த மாதம் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு எலுமிச்சை பழம் ரூ.7 முதல் ரூ.10 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் எடுத்துக்கொண்டால் தரத்தை பொறுத்து ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.150 முதல் ரூ.170 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக எலுமிச்சை பழ வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story