நாயை கொன்ற சிறுத்தை? பொதுமக்கள் அச்சம்

அவிநாசி அருகே கோரமான நிலையில் இறந்து கிடந்த நாயை, சிறுத்தை அடித்துக் கொன்றதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் அவிநாசி அருகே முகம் பகுதி இன்றி இறந்து கிடந்த நாயை சிறுத்தை அடித்துக் கொன்றதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் கடந்த கடந்த ஆண்டு சிறுத்தை ஒன்று புகுந்தது. இந்த சிறுத்தை நாயை அடித்துக் கொள்வதும், பொதுமக்களை தாக்குவதுமாக இருந்தது. திருப்பூர் மாநகர பகுதிக்கு உள்ளே நுழைந்தது. இதன் பின்னர் வனத்துறையினர் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை பிடித்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவிநாசி பகுதியில் நாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதனால் மீண்டும் அந்தப் பகுதியில் சிறுத்தை புகுந்ததாக தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று அவிநாசி அடுத்த சேவூர் கிலாகுளம் பகுதியில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் காவலுக்காக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு தோட்டத்தில் உள்ள நாய் நீண்ட நேரம் குரைத்துக் கொண்டு இருந்துள்ளது. இதற்கிடையே காலையில் சென்று பார்த்த போது நாய் முகப்பகுதி இன்றி இறந்து கிடந்தது. மேலும் அதன் உடல் பாகம் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தது. இது ஒரு தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பொதுமக்கள் பலர் திரண்டனர்.

நாயை சிறுத்தை அடித்து கொன்றதாக அந்த பகுதியில் தகவல்கள் பரவியது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story