வீட்டுக்குள் புகுந்த குட்டி மான்.:அடைக்கலம் கொடுத்த உரிமையாளர்
கோப்பு படம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் புதூர் பாளையம் கிராமத்தில் குட்டிமான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. நாய்கள் குரைத்ததால் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தது.குட்டி மானை அரவணைத்து அடைக்கலம் கொடுத்த வீட்டின் உரிமையாளர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் மான், நரி, காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்குகள் உள்ளிட்டவைகள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது கிராம பகுதிகளுக்கு வன விலங்குகள் வருவது வழக்கம்.
இந்நிலையில் புள்ளம்பாடி அருகே புதூர் கிராமத்தில் குட்டிமான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. இந்த குட்டிமானை கண்டதும் நாய்கள் குரைக்க் தொடங்கின. இதனால் பயந்து போன குட்டி மான் ஒருவரது வீட்டுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் மானை அரவணைத்து பாதுகாத்தார். இது குறித்து அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story