சேலம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு குடிமகன்கள் கைவரிசை
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்த இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகலையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும் வாகனங்களில் செல்வாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் டாஸ்மாக் (கடைஎண்7165) கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். வழக்கம்போல் இன்று காலை கடைக்கு வந்த பணியாளர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு பாட்டில்கள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்துக்கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story