நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
காதல் ஜோடி
நாட்றம்பள்ளி அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தர் பள்ளி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமார் 25, ஆம்பூர் சானாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜீவிதா 23 இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு ஓடி சென்று காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் நாட்றம்பள்ளிகாவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர் காவல்துறையினர் இரு பெற்றோர்களும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி காதல் ஜோடிகளை பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story