மூதாட்டி வீட்டில் மேற்கூரையை பிரித்து திருடியவர் கைது
கைது
சேலம் கொண்டலாம்பட்டியில் மூதாட்டி வீட்டின் மேற்கூரையை பிரித்து ரூ.1000 பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டியில் சித்தன்நகரை சேர்ந்தவர் குணகவள்ளி (வயது 55). இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பீரோவில் இருந்த 1000 ரூபாயை திருடி சென்றனர். இதுதொடர்பாக நாழிக்கல்பட்டி அருகே கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த சுேரஷ் (20) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குணகவள்ளி வீட்டில் திருடியதை சுரேஷ் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story