லாரி உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது!
கோப்பு படம்
தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ரோச் காலனியைச் சேர்ந்தவர் ராசைய்யா மகன் பூர்ண ஈசன் நோபல் (32). இவர் போல்பேட்டையில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் கோமதிபாய் காலனியைச் சேர்ந்த முனியசாமி மகன் செந்தூர் செல்வம் என்பவருக்கும் இடையே லாரி வாடகை பாக்கி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. இ
ந்நிலையில் நேற்று செந்தூர் செல்வம் உட்பட 4பேர் நேற்று அவரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார்களாம். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் கொலை முயற்சி வழக்குப் பதிந்து செந்தூர் செல்வத்தை கைது செய்தார். மேலும் 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags
Next Story