சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது.
யோகேஸ்வரன்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், செனனாவரம் கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் (22) என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக, வந்தவாசி தெற்கு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் வழக்குபதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். அவர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story