நெல்லை அருகே துணை தலைவர் வீட்டில் திருடியவர் கைது
காவல் நிலையம்
நெல்லை அருகே துணை தலைவர் வீட்டில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி தெற்கூரை சேர்ந்தவர் செல்லத்துரை(50). இவரது மனைவி மெர்சி. இவர், பொன்னாக்குடி ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ளார்.
இவரது வீட்டில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி மர்ம நபர்கள் வீட்டை உடைத்து நகைகளை திருடினர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்று எபநேசர் என்பவரை கைது செய்து நகைகளை மீட்டனர்.
Tags
Next Story