திருமண அழைப்பிதழை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்
தேர்தல் ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகள் உரிமையாளர்களுக்கான கூட்;டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. 1) அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குளின் உரிமையாளர்களும் தேர்தல் அறிவிப்பு வரப்பெற்று,தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை தங்கள் மண்டபங்களில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளை, பதிவு செய்தமைக்கான திருமண/பூப்புனித/இதர நிகழ்ச்சிக்கான அழைப்பிதழின் நகல்களை தினசரி நேரடியாகவோ / தபால் மூலமாகவோ, தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 2) திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினர் பரிசு பொருள்களை விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
3) அரசியல் கட்சியினர் சமுதாய விருந்து போன்றவற்றை நடத்த அனுமதி வழங்க கூடாது. அவ்வாறு அரசியல் கட்சியினர் தங்கள் நிகழ்ச்சி நடத்திட அனுமதி கோரினால் தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று உள்ளனரா என்பதை சரிபார்த்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். மேலும் அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் அதற்குரிய செலவுத் தொகை வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். 4) திருமண மண்டபங்கள் மற்றும் கூட்டரங்குகளில் நடத்தப்படும் நிகழ்ச்;சிகள் உண்மையிலே திருமணம் மற்றும் மத தொடர்புடைய நிகழ்வுகளே என உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். அரசியல் கட்சி தொடர்புடையது எனத் தெரிய வந்தால் தேர்தல் பறக்கும்படை / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், நாடாளுமன்ற பொது தேர்தல் தூத்துக்குடி தொகுதியில் நல்ல முறையில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கோரப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முனைவர்.லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர், ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ப.ராஜகுரு, தேர்தல் வட்டாட்சியர் தி.தில்லைபாண்டி மற்றும் திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
The marriage invitation should be handed over to the election officer