மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டனர் 

மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் மத்திய அரசை கண்டித்து மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தோழமை கட்சிகளுடன் இணைந்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். ரவிவர்மன் தலைமை வகித்தார்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்ல பாண்டியன், எம்எல்ஏக்கள் எம் .சின்னதுரை (கந்தர்வகோட்டை) வை. முத்துராஜா (புதுக்கோட்டை) திமுக இலக்கிய அணி துணை தலைவர் ராசு கவிதை பித்தன் நகரச் செயலர் செந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தா. செங்கோடன் மதிமுக மாவட்ட செயலாளர் கே கலியமூர்த்தி, நகர தலைவர் தர்மராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வை மறுத்தது பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க மறுப்பது ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கீடு மறுப்பது மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story