இஸ்ரேல் அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீது இனப்படுகொலை தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்து பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலைப் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி,பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு சார்பில் காவேரி ஆர்.எஸ்.பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தின் சின்னஞ்சிறு பகுதி யான காசாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபர் 7 அன்று துவங்கி தற்போது வரை இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது. மருத்துவமனைகள், உணவுக் கூடங்கள், பள்ளிக்கூடங்கள் என்று கூட பாராமல் தாக்குதல் நடத்தி, இதுவரை 36 ஆயிரம் பேரை, இஸ்ரேல் கொன்று குவித்துள்ளது.

இவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் பெண் கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொது மக்கள். இவ்வாறு மனிதகுலம் வெட்கித் தலை குனியும்படியான ஒரு கொடூரமான தாக்கு தலைக் கட்டவிழ்த்து விட்டுள்ள இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்தும், ரபாவின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், சுயேட்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மோடி அரசு இஸ் ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமார் தலைமை தாங்கினார் .

இதில் இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் கட்சி ஒன்றிய குழு செயலாளர் ஆர்.ரவி , மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.மோகன், அலமேலு, கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.குமார், சரவணன் கே.மோகன், விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் எ.அசன், பொருளாளர் முருகேசன் , கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இஸ்ரேல் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்..

Tags

Next Story