மாணவர்களுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் பாராட்டு
திருநெல்வேலியில் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் பிளஸ் டூ, 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வீரவநல்லூர் பள்ளிவாசல் ஜமாத் சார்பில் பாராட்டு விழா இன்று (மே 18) நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கி ஜமாத் நிர்வாகிகள் பாராட்டினர். இதற்கான ஏற்பாட்டை வீரவநல்லூர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story