சிப்காட்டிற்கு நிலம் கேட்கும் விவகாரம் - எம்எல்ஏ ஈஸ்வரன்

சிப்காட்டிற்கு நிலம் கேட்கும் விவகாரம் - எம்எல்ஏ ஈஸ்வரன்

ஈஸ்வரன் எம்எல்ஏ


சிப்காட்டிற்கு நிலத்தை கேட்டு பொதுமக்களை மிரட்டினால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, புதுப்பட்டி, லத்துவாடி,அரூர், பரளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், சிப்காட் அமைப்பது குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் வளையப்பட்டி பகுதியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன் கலந்து கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டார். அப்போது பெரும்பாலான பொதுமக்கள் சிப்காட்டிற்கு நிலத்தை கையகப்படுத்த கூடாது என தெரிவித்தனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், சிப்காட் அமைந்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என பெரும்பாலான பொதுமக்கள் தெரிவித்தனர், இந்த விவசாய நிலத்தை வைத்து தான் தங்களது வாழ்வாதாரம் உள்ளதாகவும் சிப்காட்டிற்கு நிலத்தை கையகப்படுத்தினால் அப்பகுதியில் வசிப்பவருக்கு புற்றுநோய், தோல்நோய் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சிப்காட் வேண்டாம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த நிலையில், அரசு ஏன் சிப்காட் கொண்டு வர முயன்று வருகிறது..?, சிப்காட் வேண்டாம் என பொதுமக்களின் கருத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், சிப்காட் திட்டத்திற்காக நிலத்தை தர வேண்டும் என பொதுமக்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர், இனி வருங்காலங்களில் சிப்காட்டிற்கு நிலத்தை கேட்டு மிரட்டினால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story