தூத்துக்குடியில் நிவாரண பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் மேயர் நன்றி

தூத்துக்குடியில் நிவாரண பணிகளை மேற்கொண்ட அனைவருக்கும் மேயர் நன்றி
நன்றி தெரிவித்த மேயர்
கனமழையால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகருக்கு பல்வேறு நிவாரண பணிகளை செய்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வல அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அதி கனமழையால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாநகருக்கு பல்வேறு நிவாரண பணிகளை செய்வதற்கு எங்களுடன் துணை நின்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,

அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், முதன்மைச் செயலாளர், பல்வேறு துறை சார்ந்த மூத்த அதிகாரிகள், அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை மேயர், கழக தோழர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை, மின்வாரியம், மாநகராட்சி என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள்,

அலுவலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரின் கூட்டு முயற்சியால் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்த நேரத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதின்படி உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்று எங்களோடு தோள் கொடுத்த அனைவருக்கும் மட்டுமல்லாது உறுதுணையாக இருந்த ஒத்துழைப்பு நல்கிய மாநகர மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story