மருத்துமனை கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்த அமைச்சர்
அமைச்சர் எ.வ.வேலு
பல்நோக்கு மருத்துமனை கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் எ.வ.வேலு தேர்வு செய்தார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பழைய அரசு மருத்துமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துமனை கட்டுவதற்கான இடத்தினை இன்று தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்,திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், சிறப்பு தலைமைப்பொறியாளர் சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பாலசுப்ரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story