மழை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடல்!

மழை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் கலந்துரையாடல்!

அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடல்

தூத்துக்குடியில் வெள்ளத்தால் வீடு இடிந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடினார்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரும் மழையால் வீடுகளை இழந்த மற்றும் வீடுகள் பெரும் சேதமடைந்த 126 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்திருந்தார். அந்தப் பயனாளிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடி அவர்களது தற்போதைய நிலை மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இதில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிாின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் கல்யாண சுந்தரம், சுரேஷ்குமார், தனசிங், முனிர் அகமது, உதவி தாசில்தார் பாரதிமீனா, வருவாய் ஆய்வாளர்கள் சரவணவேல்ராஜ், செல்வக்குமாா், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜேஷ்கண்ணா, செந்தில்குமார், ரவிசந்திரன், ரத்தினராஜ், சண்முககனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story