1,616 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அமைச்சர் வழங்கினார்.

1,616 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அமைச்சர் வழங்கினார்.

1,616 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

1,616 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டு ரூ.11.80 கோடிமதிப்பீட்டில் 1,616 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 100 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களையும், கலைப்பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கு ரூ.70,000/- மதிப்பில் பரிசுத் தொகைகளையும் வழங்கினார். தொடா்ந்து நாமக்கல்நகராட்சி, நாமகிரித் தாயார் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் அலங்கார பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியையும், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆவின் பாலகத்தையும் அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, நகர்மன்ற துணைத் தலைவர் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட இயக்க மேலான்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பிரபாகரன், ஒன்றிய செயலாளா் வி.கே.பழனிவேல், அ.அசோக்குமார், நகர செயலாளா்கள் ராணா ஆனந்த், சிவக்குமார் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story