புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய அமைச்சர்
புத்தகங்களை வழங்கிய அமைச்சர்
குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில்,தனது சொந்த நிதியில் தயாரிக்கப்பட்ட மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் தனது சொந்த நிதியில் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 8,612 மாணவ மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான மிக முக்கிய வினா விடைகள் அடங்கிய புத்தகங்களை வழங்கி வருகின்றார். அதனடிப்படையில் இன்று 10ஆம் வகுப்பு பயிலும் 306 மாணவ,மாணவிகளுக்கும், 11ஆம் வகுப்பு பயிலும் 352 மாணவ,மாணவிகளுக்கும், 12 ஆம் வகுப்பு பயிலும் 274 மாணவ,மாணவிகளுக்கும் என மொத்தம் பல்வேறு பள்ளிகளில் பயிலும் 932 மாணவ,மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பிலான புத்தகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சாசி சிவசங்கர் வழங்கினார்.
இந்தப் புத்தகங்கள் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்து .
பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் மாணவ மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தேர்வில் கட்டாயம் கேட்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள் அதற்கான விடைகளுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாக்களும், விடைகளும் மாணவர்களுக்கு புரியும் வகையிலும் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், குன்னம் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.