தென்காசியில் அரசு பேருந்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து அமைச்சர் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்தப்பட்ட தென்காசி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் அரசு விரைவு பேருந்தை மறுபடியும் இயக்கும் விழா நேற்று மாலையில் நடைபெற்றது . இந்த விழாவில் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அரசு பேருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி எம்.எல்.ஏ பழனி நாடார், சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Next Story