சிறுகனூரில் பொதுக் கூட்டத்திற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்

சிறுகனூரில் பொதுக் கூட்டத்திற்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்

ஆய்வு பணியில் அமைச்சர் 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் நடைபெற உள்ள திமுக பொதுக்கூட்டத்திற்க்கான இடத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகின்ற மார்ச் 22 ம் தேதி திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு நேரில் சென்று பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.

Tags

Next Story