அரசு பள்ளிகளில் ஆதார் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்!

அரசு பள்ளிகளில் ஆதார் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்!

ஆதார் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்

பள்ளியிலேயே ஆதார் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
கோவை:காளப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.இதன் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஆதார் எண்ணுடன் கூடிய அட்டையை பயன்படுத்த வசதியாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்து செய்து கொள்வதற்கு வசதியாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்திட எல்காட் மூலமாக 770 ஆதார் பதிவு மின்னனு கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.இதனால் அனைத்து பள்ளிகளிலும் பிறந்த குழந்தை முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் வரை புதியதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும் இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் இத்திட்டத்தினை பயன் படுத்தி பதிவு செய்து கொள்ள முடியும்.இத்திட்டம் மூலம் பதிவு செய்து அரசு பள்ளி மாணவ,மாணவிகள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.திட்டம் துவக்க விழாவில் பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி,ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் சுவேதா,அரசு செயலாளர் குமரகுருபரன்,கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, காளப்பட்டி அரசுமேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story