கணக்கம்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

கணக்கம்பாளையத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

வளர்ச்சி பணிகள் தொடங்கி வைத்த அமைச்சர் 

திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 3.91 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட வளர்ச்சிப் பணிகளை செய்திதுறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.3.91 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் நிதி திட்டம், 15-வது நிதிக்குழு மானியம் திட்டம் மற்றும் ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ், ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:& தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 என்கிற மகத்தான திட்டத்தை வழங்கியது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர் 1996ம் ஆண்டு 4-வது முறையாக பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருந்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல் கிராமப்புறங்களுக்கு சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் சிறப்பாக பயன்பட்டு வருகிறது.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் சாலை விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் வகுக்கப்பட்ட உன்னத திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம். விபத்து நடந்த உடன் எவ்வித தாமதம் இல்லாமல் விபத்தில் சிக்கயவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் அவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் நம்மைகாக்கும் 48 மணி நேரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி, கணக்கம்பாளையம் பிரிவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.04 கோடி மதிப்பீட்டில் பி.என் ரோடு கணக்கம்பாளையம் பிரிவு முதல் ஆண்டிபாளையம் ஏ.டி.காலனி வாய்க்கால் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கணக்கம்பாளையம் வழியாக சின்னப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,

ரூ.11.82 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிபாளையம் குக்கிராம் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் திருப்பூர் சாலை முதல் சர்ச் வீதி வழியாக சரோஜினி பர்னிச்சர் கடை வரையிலும் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி, ரூ.16.17 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிபாளையம் குக்கிராமம் கஸ்தூரி பாய் நகர் பகுதியில் சுமதி வீடு முதல் நடராஜ் வீடு வழியாக என்.எஸ்.பி. கம்பெனி ட்ராஸ்பாரம் வரை புதியதாக தார்சாலை அமைக்கும் பணி. இதுபோல் உட்கட்டமைப்பு வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.27.87 இலட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கணக்கம்பாளையம் கிருஷ்ணா பெட்ரோல் பங்க் முதல் கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி வழியாக ரத்னா நகர் வரை தார் சாலை புதுப்பித்தல் பணி,

ரூ.27.10 லட்சம் மதிப்பீட்டில் இந்துமதி அவென்யூ பகுதியில் தார்சாலை புதுப்பித்தல் பணி ரூ.8.88 லட்சம் மதிப்பீட்டில் நாதம்பாளையம் ரோடு முதல் கருப்புசாமி நகர் வழியாக கணக்கம்பாளையம் ஊராட்சி எல்லை வரை தார் சாலை அமைக்கும் பணி, ரூ.10.22 லட்சம் மதிப்பீட்டில் நாதம்பாளையம் ரோடு முதல் சௌடேஸ்வரி நகர் வரை தார் சாலை அமைக்கும் பணி,

ரூ.17.19 இலட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் கே.சி.பி கார்டன் - முதல் வள்ளியாத்தாள் காடு கார்த்தி வீடு வரை தார் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது. மேலும், ரூ.35.13 லட்சம் மதிப்பீட்டில் பெருமாநல்லூர் கூலிபாளையம் ரோடு முதல் மீனாட்சிநகர் இரண்டாவது வீதியில் தார் சாலை புதுப்பித்தல் பணி,

15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.13.31 இலட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட அய்யம்பாளையம் குக்கிராமம் பகுதியில் குடிநீர் குழாய் விரிவுபடுத்தி 290 தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல் பணி, ரூ 3.68 லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் ராஜ வீதி முதல் காமாட்சி அம்மன் கோவில் வழியாக தாண்டாகவுண்டன்புதூர் சாலை வரை தார் சாலை புதுப்பித்தல் பணி, ரூ.6.27 லட்சம் மதிப்பீட்டில் அய்யம்பாளையம் குக்கிராமம் வாஷிங்டன் நகர் சரசு வீடு முதல் நிர்மலா டீச்சர் வீடு வரை தார் சாலை புதுபித்தல் பணி,

ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் – பெருமாநல்லூர் செல்லும் சாலையில் சந்தை அருகில் முதல் விநாயகாபுரம் தென்புறம் பகுதியில் ரவி வீடு வரை பிவிசி குழாய் மற்றும் உறிஞ்சிகுழி அமைத்து கழிவு நீரை வெளியேற்றல் பணியினையும், ரூ.5. லட்சம் மதிப்பீட்டில் கணக்கம்பாளையம் குக்கிராமம் சாய் அவென்யூ பகுதியில் உள்ள வீடுகளில் பிவிசி குழாய் மற்றும் மேன்ஹால் உறிஞ்சி குழி அமைத்து கழிவு நீரை வெளியேற்றல் பணி என மொத்தம் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, டாலர் அப்பேரல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.ராமமூர்த்தி, திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், உதவி பொறியாளர் கற்பகம்,

கணக்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story