கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நடவடிக்கை எடுத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை நடவடிக்கை எடுத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

கிராம மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான மேம்பால கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.
திண்டுக்கல் : தாடிக்கொம்பு பேரூராட்சியில் உள்ள ஆத்துப்பட்டி கிராம மக்கள் குடகனாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது ரூ.7.28 கோடி மதிப்பில் மேம்பால கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.திண்டுக்கல் ஒன்றியம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் அமைந்துள்ளது ஆத்துப்பட்டி கிராமம். இங்கு வசிக்கும் மக்களின் 40 வருட கோரிக்கையை நிறைவேற்றி ரூ.7.28 கோடி மதிப்பில் குடகனாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமிக்கு மனதார கிராம மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story