பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டிடங்களை திறந்த அமைச்சர் !
கட்டிடங்களை திறந்த அமைச்சர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதிகளான கத்தாளம்பட்டி பாப்பாகுடி,நென்மேனி சின்ன கொல்லப்பட்டி மற்றும் ஓ.மேட்டுபட்டி ஆகிய பகுதிகளில் தமிழக வருவாய் த்துறை அமைச்சர் கே.எஸ்.ஆர் இராமச்சந்திரன் ஒரு கோடியே 11 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம்,ஊராட்சி ஒன்றிய நிதியில் நியாயவிலைக்கடை மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். மேலும் புதிய ரேஷன் கடையில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவிக்கையில், தமிழக அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் நலனுக்காக அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருவதோடு,வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த ரேஷன் கடைகள் மற்றும் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களை கட்டி மக்கள் சேவையில் தொய்வில்லா நிலையை உருவாக்கி வருகிறது என்றும் கிராம அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி தன்னிரைவு பெற அரசு பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story