பத்திரிகையாளர் உடல் நலன் குறித்து நேரில் கேட்டறிந்த அமைச்சர்

பத்திரிகையாளர் உடல் நலன் குறித்து நேரில் கேட்டறிந்த அமைச்சர்

செய்தியாளர் நேரில் சந்தித்த அமைச்சர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர் உடல் நலன் குறித்து நேரில் அமைச்சர் கேட்டறிந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தனியார் தொலைகாட்சி நிருபர் நேசபிரபுவின் உடல் நலன் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ,நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி பல்லடம் தாலுக்கா செய்தியாளர் நேசபிரபு நேற்று இரவு சில நபர்களால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துவருவதாக ஆறுதலான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க தவறிய காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதில் தொடர்புடைய சரவணன் மற்றும் இன்னொரு நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் முதல்வர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மன வருத்தம் அடைந்துள்ளார்.

எனவும் முதல்வரின் உத்தரவின்படி பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலை நேரடியாக வழங்கப்படுவதாக கூறியவர் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளருக்கான முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர் முதல்கட்டமாக நல வாரியம் மூலம் 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் காண காசோலையை நேசபிரபுவின் தாய்-தந்தையரை அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிகாரிகள் வழங்க உள்ளனர் எனவும் அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story