சிவகங்கையில் 3,171 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்
நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில், கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் ஆகியவைகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியபோது, இந்தியாவில் முதல் கூட்டுறவு சங்கம் 1904-ல் திருவள்ளூவர் மாவட்டத்தில் “திரூர்” என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கூட்டுறவுத்துறை, தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது பெருமைக்குரியதாகும். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 211 வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் தவிர வீட்டுவசதித்துறை, பால்வளத்துறை, சமூக நலத்துறை மற்றும் பட்டுவளர்ச்சித்துறை போன்ற துறைகளிலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ரூ.2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனிநபரின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாகவும் சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக நலிவடைந்த பிரிவினருக்கு கைகொடுத்து தூக்கிவிடும் துறையாகவும் கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 71,456 உறுப்பினர்களுக்கு ரூ.374.18 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவியும், 7,853 உறுப்பினர்களுக்கு ரூ.48.35 கோடி மதிப்பீட்டில் கால்நடைப்பராமரிப்பு கடனுதவியும், 2,47,920 உறுப்பினர்களுக்கு ரூ.1,519.03 கோடி மதிப்பீட்டில் நகைக்கடனுதவியும், 2,384 குழுக்களுக்கு ரூ.134.98 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடனுதவியும், 1,368 உறுப்பினர்களுக்கு ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவணிக கடனுதவியும், 30 உறுப்பினர்களுக்கு ரூ.2.01 கோடி மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவியும், 90 உறுப்பினர்களுக்கு ரூ.4.24 கோடி மதிப்பீட்டில் வீட்டு அடமான கடனுதவியும், 576 உறுப்பினர்களுக்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் மாற்றத்திறனாளிகள் கடனுதவியும், 83 உறுப்பினர்களுக்கு ரூ.0.93 கோடி மதிப்பீட்டில் டாப்செட்கோ கடனுதவியும், 140 உறுப்பினர்களுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவியும், 84 உறுப்பினர்களுக்கு ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் தாட்கோ கடனுதவியும், 3,710 உறுப்பினர்களுக்கு ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் மகளிர் தொழில் முனைவோருக்கான கடனுதவியும், 275 உறுப்பினர்களுக்கு ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் பணிபுரியும் மகளிர் கடனுதவியும், 98 உறுப்பினர்களுக்கு ரூ.0.18 கோடி மதிப்பீட்டில் கைம்பெண் கடனுதவியும் மற்றும் 1,763 உறுப்பினர்களுக்கு ரூ.9.49 கோடி மதிப்பீட்டில் பண்ணைசாரா கடனுதவியும், 96 உறுப்பினர்களுக்கு ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் தானிய ஈட்டுக்கடனுதவியும், 80,731 உறுப்பினர்களுக்கு ரூ.1,409.70 கோடி மதிப்பீட்டில் இதரக்கடனுதவிகளும் என மொத்தம் 4,18,657 நபர்களுக்கு ரூ.3,537.12 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் தற்சமயம் வரை கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்