குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சையை துவக்கி வைத்த அமைச்சர்

குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சையை துவக்கி வைத்த அமைச்சர்

மூவோட்டுகோணம் தேவி கோவிலில் தூக்க நேர்ச்சையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.


மூவோட்டுகோணம் தேவி கோவிலில் தூக்க நேர்ச்சையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
குமரி எல்லையில் பிரசித்தி பெற்ற மூவோட்டுகோணம் தேவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நாளில் தூக்க திருவிழா கொடியேறி சித்திரை மாதம் பூரம் நாளில் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நடப்பது வழக்கம்.இந்த ஆண்டைய திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் உஷபூஜை, பூதத்தான் பூஜை, பத்திரகாளி பாட்டு, உச்ச பூஜை, அன்னதானம், இருத்தி பூஜை, குங்குமாபிஷேகம், புஷ் பாபிஷேகம், பகவதிசேவை, நமஸ்காரம், பொங்கல் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் உள் ளிட்டவை நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று மதியம் 2 மணிக்கு தூக்க நேர்ச்சை துவங்கியது. கோவில் தலைவர் பிரதீப் பிரபாகர் தலைமை வகித்தார். செயலாளர் தனகுமார் வரவேற்றார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் தூக்க நேர்ச்சையை துவக்கி வைத்தார். விழாவில், பளுகல்பேரூராட்சி தலைவர் லிஜி, துணைத்தலைவர் ஜெயேந்தி ரன் இடைக்கோடு பேரூ ராட்சி தலைவர் உமா தேவி, பளுகல் அ.தி. மு.க., செயலாளர் ஷாஜி, பளுகல் வர்த்தக சங்க செயலாளர் ஜோய் பிரகாஷ் மற்றும் கோவில் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர் கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில், குமரி மாவட்டத்தில் இருந் தும், கேரளாவில் இருந்தும் 65 குழந்தைகளுக்கு தூக்கணர்ச்சி நடத்தப்பட்டது

Tags

Next Story