அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

அபிவிருத்தி பணிகளை  தொடங்கி வைத்த அமைச்சர்

அடிக்கல் நாட்டிய அமைச்சர்

அபிவிருத்தி பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டபணிகள் தொடர்ந்து செயல்படுத்தபட்டு வருகிறது இதனையொட்டி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் 11.84 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் அபிவிருத்தி பணிகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு தனிநபருக்கு 96 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்கபடும் என தெரிவிக்கபட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், உடையார்பாளையம் பேரூராட்சி தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் மற்றும் அரசுதுறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story