பாலையூர் மக்களின் 10 வருட கோரிக்கையை நிறைவேற்றி தந்த எம்எல்ஏ
புதிய பேருந்து சேவையை தொடக்கி வைத்த எம்எல்ஏ
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாலையூர் கிராம பொதுமக்கள் பேருந்து வசதி கேட்டு கடந்த 10 வருடமாக பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
இது சம்பந்தமான கோரிக்கை மனு மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து பேருந்து வசதி கேட்டு கடந்த 10 வருடமாக காத்திருந்த பொது மக்களுக்கு எம்எல்ஏ கதிரவன் புதிய பேருந்து வழித்தடத்தை பெற்றுத் தந்தார். இந்த புதிய பேருந்து வழித்தடமானது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வாலையூர்,
பாலையூர் வெள்ளக்கல்பட்டி வழியாக புத்தனாம்பட்டி வரை செல்கிறது. பத்து வருடமாக போராடிய பாலையூர் பொதுமக்களில் நலனை கருத்தில் கொண்டு புதிய பேருந்து வழிதடத்தை ஏற்படுத்திக் கொடுத்த எம்எல்ஏ கதிரவனுக்கு பாலையூர் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்து புதிய பேருந்து வழித்தடத்தை இயக்கி வைத்தனர்.