பொதுமக்களிடம் நிறைகுறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
பொதுமக்களிடம் கருத்து கேட்டு எம்எல்ஏ
ஒகேனக்கலில் தற்போது நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகள் குறித்து நிறைகுறைகளை எம்எல்ஏ கேட்டறிந்தார்.
தர்மபுரி மாவட்டம்,பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஒகேனக்கல் சுற்றுலா தளம். இங்கு தினந்தோறும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் சுற்றுலா தளத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தேவையான அடிப்படை வசதிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஜி கே மணி நேற்று மாலை பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் பாமக நிர்வாகிகள்,மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story