நம்ம ஊரு நம்ம எம்எல்ஏ நிகழ்ச்சி - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற எம் எல் ஏ

நம்ம ஊரு நம்ம எம்எல்ஏ நிகழ்ச்சி - பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற எம் எல் ஏ
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற எம் எல் ஏ
போரூர், பெரியகளக்காடி , புத்திரங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் நம்ம ஊரில் நம்ம எம் எல் ஏ நிகழ்ச்சியில் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்று கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போரூர், பெரியகளக்காடி புத்திரங்கோட்டை, ஆகிய ஊராட்சிகளில் 'நம்ம ஊரில் நம்ம எம்எல்ஏ' நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் விசிக கட்சியின் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத் தொகை ஊனமுற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் சரவணன், விசிக கட்சி மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.ஆதவன், திமுக ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் சாந்திரவிகுமார், துணை பெரும் தலைவர் பிரேமாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்மல்குமார், வடிவேல், கலையரசிஇறுதயராஜ், விசிக கட்சி ஒன்றிய செயலாளர்கள் தமிழ்விரும்பி, புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story