தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

ஜிகே மணி

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து பென்னாகரம் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாமக கௌரவ தலைவருமான ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.4.2024 அன்று நடந்து முடிந்த தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் இரவு பகலாக வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பென்னாகரம் தொகுதியில் உழைத்தவர்களுக்கும் அதேபோல் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர், அரூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையாக உழைத்தவர்களுக்கும் மிகுந்த நம்பிக்கை உடன் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளர் சகோதரி முனைவர் சௌமியா அன்புமணிக்கு வாக்களித்தவர்களுக்கும் நன்றி என்றும் இதேபோல் பா.ம.க போட்டியிட்ட தர்மபுரி, அரக்கோணம், திண்டுக்கல், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ஆரணி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதியில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் மேலும் தமிழ்நாடு புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி தோழமை கட்சியினர், வேட்பாளர்களுக்கு, உழைத்தவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் மிகுந்த நன்றி, தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story