கோவில் விழாவில் தீர்த்த குடத்துடன் நடனமாடிய எம்.எல்.ஏ.,

கோவில் விழாவில் தீர்த்த குடத்துடன் நடனமாடிய எம்.எல்.ஏ.,

அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் விழாவில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் தீர்த்த குடத்துடன் நடனமாடினார்.

அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் விழாவில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., விஜயகுமார் தீர்த்த குடத்துடன் நடனமாடினார்.
கோவில் விழாவில் தீர்த்த குடத்துடன் நடனமாடிய எம்.எல்.ஏ. திருப்பூர் அங்கேரிபாளையம் மகாகாளியம்மன் கோவில் நூறாண்டு பழமை வாய்ந்த கோவில். இந்த கோவிலில் மார்கழி மாதம் பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிருந்து தீர்த்தம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் பக்தர்களுடன் சேர்ந்து தாளத்திற்கு ஏற்றார்போல்கையில் வேப்பிலையுடன் நடனமாடி கோவில் வரை தீர்த்தக்குடம் எடுத்து வந்தார். 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவருடன் சேர்ந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்பு தீர்த்தங்கள் அனைத்தும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Tags

Next Story