பெரம்பலூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ
பணிகளை தொடக்கி வைத்த எம்எல்ஏ
பெரம்பலூர் ஒன்றியத்தில் செல்லியம்பாளையம், நடுவலூர், கல்பாடி, க.எறையூர், ஆகிய கிராமங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட, செல்லியம்பாளையம், நடுவலூர்,கல்பாடி, க.எறையூர் ஆகிய கிராமங்களில்,பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மார்ச் 11ஆம் தேதி பகல் 12:30 மணியளவில்பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, பெரம்பலூர் முதல் விராலிப்பட்டி வரை செல்லும் 9 C நகரப்பேருந்து செல்லியம்மாபாளையம் வழியாக செல்வதற்கு கொடியசைத்துபேருந்து சேவையை தொடங்கி வைத்தார், நடுவலூர் ஊராட்சியில் ரூ 40.00 இலட்சம் மதிப்பீட்டிலானபுதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் தொடர்ந்து கல்பாடி ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி 15வது நிதியின் ரூ 7.20இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை பணியினை தொடங்கி வைத்தார்.
மேலும் கல்பாடி ஊராட்சியில்ஸ்பெஷல் அசிஸ்டோ ஸ்டேட் பார் கேப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் நிதியின் கீழ் ரூ 22.00இலட்சம் மதிப்பீட்டிலான புதிய ஊரக பகுதி நூலகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்பணியை தொடங்கி வைத்தார், தொடர்ந்து க.எறையூர் கிராமத்தில் நீர்வளத்துறை சார்பாக ரூ 12.00இலட்சம் மதிப்பீட்டிலான மருதையாற்றின் வாய்க்ககால் தூர்வாரும் பணியினை பார்வையியிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது திமுக வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழில் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.