இரண்டு குழந்தைகளின் தாய் மாயம் காவல்துறையினர் விசாரணை
அரக்காசன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு.இவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என பெரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாலை அரக்காசன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு.இவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தையும், நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 31ம் தேதி, சேட்டு வேலை நிமிர்த்தமாக வெளியூர் சென்றிருந்தார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, அங்கிருந்த சத்யா மற்றும் குழந்தைகளை காணவில்லை. அவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரும்பாலை காவல் நிலையத்தில் சேட்டு புகார் அளித்தார். அதன் பேரில் பெரும்பாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story