தாராபுரத்தில் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு எம்பி நன்றி
நன்றி தெரிவித்த எம்பி
தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் தாராபுரம் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.
தாராபுரம் நகர பகுதிக்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் தாராபுரம் நகர பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு தாராபுரம் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே இ பிரகாஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பேசுவதில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 63 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தனது சொந்த சட்டமன்ற தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விட 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இதேபோன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1300 வாக்கு கள் வித்தியாசத்தில் தான் நமது கூட்டணி உழைப்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றாக உழைத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிகள் செய்வேன் எனவும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நிதியிலிருந்து,
தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனவும் தெரிவித்தார். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும் ஊராட்சி ஒன்றிய செயலாளருமான எஸ்.வி.செந்தில்குமார், திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், திமுக நகர மன்ற துணைச் செயலாளர் கமலக்கண்ணன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி பெரியசாமி, சரஸ்வதி ராஜேந்திரன், தாராபுரம் நகர அவை தலைவர் கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், தாராபுரம் நகர் மன்ற உறுப்பினர்கள் ஹைடெக் அன்பழகன், ஶ்ரீதர், புனிதா சக்திவேல், முத்துலட்சுமி,கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் துரைசாமி , சின்னக்காம்பாளையம் பேரூர் கழக செயலாளர் பன்னீர்செல்வம்,
திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.