முக்கடல் அணை தொடர் மழையால் 12 அடியை நெருங்கியது 

முக்கடல் அணை தொடர் மழையால் 12 அடியை நெருங்கியது 

கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் அணை தொடர் மழையால் 12 அடியை நெருங்கியது.


கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் அணை தொடர் மழையால் 12 அடியை நெருங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. 25 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையிலிருந்து நாகர்கோவில் மாநகருக்கு மட்டுமின்றி, பல்வேறு வழியோர கிராமங்களுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் முக்கடல் அணை நீர் மட்டம் மைனஸ் நிலைக்கு வருவது வழக்கம். இந்த வருடமும் மார்ச் ஏப்ரல் மற்றும் மே இரண்டாவது வாரம் வரை கோடை வெயில் வாட்டி வதைத்து. இதனால் அணையின் நீர்மட்டம் மே இரண்டாவது வாரம் ஒரு அடியாக குறைந்து, மைனஸ் நிலைக்குச் செல்லும் சூழல் உருவானது.

இதனால் முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் வழங்க முடியாத நிலையில், புத்தன் அணையிலிருந்து தினமும் தண்ணீர் வினியோகம் நடைபெற்று வந்ந்தது. தற்போது கடந்த ஒரு வாரத்துக்கு மேல் குமரி மாவட்டத்தில் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் முக்கடல் அணை பகுதியிலும் மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தது. இன்றைய காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 12 அடியை நெருங்கி வருகிறது. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் அணை நீர்மட்டம் மேலும் உயரும் நிலை இருந்து வருகிறது.

Tags

Next Story