கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி ஆஜர்

கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி ஆஜர்
நீதிமன்றம் 
பண்ருட்டி அருகே எம்பிக்கு முந்திரி ஆலையில் பணிபுரிந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷ் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜரானார்.
கடலுார் தி. மு. க. , - எம். பி. , ரமேஷ், 50. இவருக்கு, சொந்தமான முந்திரி ஆலையில் பணிபுரிந்த பண்ருட்டி அடுத்த, மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, 2021ம் ஆண்டு செப்டம்பரில் கொலை செய்யப்பட்டார். கடலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் மற்றும் முந்திரி ஆலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, விழுப்புரம் மாவட்ட சி. பி. சி. ஐ. டி. , போலீசார், ரமேஷ் உள்ளிட்ட வர்கள் மீது, கடலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை, கடலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா முன், நேற்று, விசாரணைக்கு வந்தது. அப்போது, தி. மு. க. , - எம். பி. , ரமேஷ், 50, வினோத், 30, சுந்தர்ராஜ், 26, அல்லா பிச்சை, 41, தங்கவேல், 48, நடராஜன், 31, ஆகியோர் ஆஜரானர். வழக்கை வரும் 30ம் தேதிக்கு, ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Tags

Next Story