மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் தி நவோதயா பள்ளி மாணவர்கள் சாதனை
தி நவோதயா பள்ளி
தமிழ்நாடு மாநில சதுரங்க அமைப்பின் அங்கீகாரத்தோடு நாமக்கல் மாவட்டத்தில் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது.
9 வயதுக்குட்பட்டோர், 11 வயதிற்குட்பட்டோர், 13 வயதிற்குட்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவு போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழம் முழுவதும் சுமார் 15 மாவட்டங்களிலிருந்து 60 பள்ளிகளைச் சார்ந்த 430 மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர். நவோதயா பள்ளியிலிருந்து பங்கு பெற்ற மாணவர்கள் முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளோடு சிறந்த ஒத்துழைப்பு நல்கிய பள்ளி என்ற விருதினையும் பெற்றது.
பள்ளி செயலாளர் A.M.தனபால் மற்றும் பொருளாளர் மு.தேனருவி வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டியதோடு இப்போட்டியை ஒருங்கிணைத்த நாதன செஸ் அகாடமி நிறுவனர் சிவராமகிருஷ்ணன் அவர்களையும் வாழ்த்தினர்.
Tags
Next Story