புதிய கால்நடை மருத்துவமனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தென்பாலை ஊராட்சியில் கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.53 லட்சத்து 50 ஆயிரம் மதிப் பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டி டத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மேல்மலையனூர் ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி முருகன், பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட கவுன்சி லர் சாந்தி சுப்பிரமணியன், செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன் சிலர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன், மாவட்ட நெசவா ளர் அணி துணை அமைப்பாளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை மருத்துவர் துரைமுருகன் நன்றி கூறினார்.