எடப்பாடி அடுத்த தங்காயூர் பகுதியில் புதிய வேளாண்மை முதன்மை பதப்படுத்தும் மையம்
முதன்மை பதப்படுத்தும் மையம்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மைய திறப்பு விழா நடைபெற்றது.
எடப்பாடி அடுத்த தங்காயூர் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மைய திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறைக்கு 210 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 55 கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கட்டுமானங்களான 5 முதன்மை பதப்படுத்தும் மையங்கள் ஆயிரம் வெற்றி குளிர்பதனை கிடங்கு மற்றும் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் விவசாயிகள் ஆலோசனை மையம் ஆகியவற்றை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம் உத்தமசோழபுரம் தங்காயூர் கோனூர் துக்கியம்பாளையம் மற்றும் காமக்காபாளையம் ஆகிய ஐந்து இடங்களில் 24.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்கள் காணொளி வாயிலாக இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தங்காயூர் கிராமத்தில் கட்டப்பட்ட முதன்மை பதபடுத்தும் மையத்தை எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விவசாயிகளின் பயண்பாட்டிற்கு விடப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் பிரேமலதா,உதவி வேளாண்மை அலுவலர்கள் பாஸ்கரன்,ராமச்சந்திரன் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் திறளாக கலந்துகொண்டனர்.
Next Story