அடுத்த போராட்டம் கோட்டையில் தான் - ஓய்வூதியர் சங்கம்
செய்தியாளர் சந்திப்பு
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1222 ஓய்வூதிய பயனாளர்களுக்கு கடந்த நவம்பர்,டிசம்பர்க்கான இரண்டு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கம் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு உள்ள திருவள்ளுவர் சிலையில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசிய ஓய்வூதியர் சங்க செயலாளர் சுவாமிநாதன் கூறும்போது: காமராஜர் பல்கலைக்கழகத்தில் இது போன்ற ஓய்வூதியம் வழங்குவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதால் நாங்கள் இந்த மாதம் ஓய்வூதியம் வழங்கவில்லை என்றால் தலைமைச் செயலகத்தில் போய் உட்கார போகிறோம் சட்டசபை கூடும் பொழுது கவர்னர் உரைக்கு முன்பு அங்கு போய் உட்கார்ந்து முதல்வருக்கு எங்கள் நிலைமையை தெரியப்படுத்துவோம். இன்னும் பத்து நாட்களில் எந்த பயனும் இல்லை என்றால் அடுத்த போராட்டம் கோட்டையை நோக்கி தான் என்றார்.
ஓய்வூதிய சங்க தலைவர் சீனிவாசன் கூறும்போது: என்றைக்கு சூட்கேசில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டார்களோ அன்றைக்கு இவர்கள் டப்பா ஆகிவிட்டார்கள். மேலே உள்ள அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் துணைவேந்தர்கள் வந்துவிட்ட காரணத்தால் நாங்கள் போய் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது ஜாதி, மதம், பணம் போன்றவற்றில் பல்கலைக்கழக வேந்தர்கள் நியமிக்கப்படாமல் நியாயமான முறையில் வேந்தர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. என்றார்