சோதனை சாவடிகளை ஆய்வு செய்த அதிகாரி

சோதனை சாவடிகளை ஆய்வு செய்த அதிகாரி

ஆய்வு

நத்தம் பகுதிகளில் வேம்பரளி, எரமநாயக்கன்பட்டி, சமுத்திரா பட்டி பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை பாராளுமன்ற தேர்தல் பொது மேற்பார்வையாளர் பிரபு லிங்காவலிகட்டி ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் நத்தம் பகுதிகளில் வேம்பரளி, எரமநாயக்கன்பட்டி, சமுத்திரா பட்டி பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளை பாராளுமன்ற தேர்தல் பொது மேற்பார்வையாளர் பிரபு லிங்காவலிகட்டி ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகளின் ஆய்வு பதிவுகளை ஆய்வு செய்தார். மேலும் முறையாக வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது நத்தம் தாசில்தார் சுகந்தி, மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன், தேர்தல் துணைத் தாசில்தார் டேனியல் பிரேம்குமார், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story