பக்கத்து வீட்டுகாரரை தாக்கிய முதியவர்
வழக்கு பதிவு
திருச்சி அருகே பக்கத்து வீட்டுகார்ரை தாக்கிய மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முசிறி தாலுக்கா மணப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான வையாபுரி.அதே பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான தேவராஜ். இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 20-ம் தேதி மாலை 5 மணி அளவில் வையாபுரி தனது மனைவியை திட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது தேவராஜ் தன்னைத்தான் வையாபுரி திட்டுகிறார் என நினைத்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த தேவராஜ் இரும்பு கம்பியால் வையாபுரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த வையாபுரி முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வையாபுரி வாத்தலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வாத்தலை போலீசார் நேற்று மதியம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story