ஊருக்குள் வரும் ஒரே பேருந்து - பெருமைபடுத்திய கிராம மக்கள்

ஊருக்குள் வரும் ஒரே பேருந்து - பெருமைபடுத்திய கிராம மக்கள்

 டி48 பேருந்து படத்துடன் பெயர் பலகை

ஆர்.கே.பேட்டை அருகே ஊருக்குள் வந்து செல்லும் ஒரே பேருந்துக்காக, அந்த பேருந்தின் படத்துடன் பெயர் பலகை வைத்து, கிராமத்தினர் பெருமைபடுத்தியுள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் மற்றும் மகன்காளிகாபுரம் ஊராட்சிகள், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக, மகன்காளிகாபுரத்தில் இருந்து திருத்தணிக்கு தடம் எண்: டி48 இயக்கப்பட்டு வருகிறது. பாலாபுரம், மகன்காளிகாபுரம் ஊராட்சிகளை சேர்ந்த 18 கிராமத்தினர், இந்த பேருந்து வாயிலாக ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணிக்கு பயணித்து வருகின்றனர்.

கல்லுாரி மாணவர்களுக்காக, காலையில், திருத்தணி அரசு கலை கல்லுாரி வரை இந்த பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. இந்த பகுதிக்கு பிரதான போக்குவரத்து சேவை அளிக்கும் டி48 பேருந்துக்காக, மகன்காளிகாபுரம் அடுத்த புதுப்பட்டு கூட்டு சாலையில், பேருந்து நிலைய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெயர் பலகையில், டி48 பேருந்து படத்தையும் சேர்த்து கவுரவப்படுத்தி உள்ளனர்.

Tags

Next Story