பள்ளிகள் திறப்பு எதிரொலி ஸ்கூல் பேக்குகள் விற்பனை அதிகரிப்பு

பள்ளிகள் திறப்பு எதிரொலி ஸ்கூல் பேக்குகள் விற்பனை அதிகரிப்பு

 ஸ்கூல் பேக்குகள் 

ஜூன் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால், ஸ்கூல் பேக்குகள் ,ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் அரசு பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் ,ஏப்ரல் 19 நாடாளுமன்ற தேதிக்கு பிறகு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறையில் மாணவ மாணவியர் தங்களுடைய, தாத்தா பாட்டி வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும் கோடை விடுமுறைக்காக சென்றிருந்த மாணவ மாணவியர் தற்போது வீடு திரும்ப துவங்கியுள்ளனர். மேலும் மாணவ மாணவிகள் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வரும் நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் பாக்குகள் காலணிகள் ஸ்டேஷனரி பொருட்கள் ஆகியவற்றை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் கடைகள் அமைத்திருக்கும் வியாபாரிகள் கூறும் பொழுது பள்ளிகள் செயல்படும் நாட்களில் தினந்தோறும் பேனா, பென்சில் ,பேப்பர் மற்றும் கல்வி கற்பதற்கு தேவையான ஸ்டேஷ்னரி பொருட்கள் தினந்தோறும் விற்பனையாகும். ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஏதும் இல்லாமல் மந்த நிலை ஏற்பட்டது. ஜூன் 10ஆம் தேதி பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பால் ,தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பள்ளியில் படித்த தங்கள் பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்காகவும் பெற்றோர்கள் இப்போதிலிருந்தே முனைப்பு காட்டி வருகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் கல்வி பயில பயன்படுத்தும் பாட புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் மஞ்சப்பை அல்லது கனமான பைகளை பயன்படுத்தி பள்ளிகளுக்கு சென்று வந்தனர். தற்போது அந்த நிலை மாறி அனைத்து தரப்பினருமே தற்போது ஸ்கூல் பேக்குகளை பயன்படுத்துகின்றனர் . தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், புதிதாக ஸ்கூல் பேக்குகள் ஸ்டேஷனில் பொருட்களை வாங்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கான பேக்குகள் 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும், ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை தரத்தை பொறுத்து பேக்குகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ஸ்கூல் பேக்குகள், காலணிகள் ,ஷூக்கள், ஸ்டேஷனரி பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினர்..

Tags

Next Story