நெய்வேலி: பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்
பேருந்தை தள்ளிய பயணிகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி பழுதாகி நிற்கும் சம்பவங்கள், சக்கரம் முதல் பயணிகளின் இருக்கையில் வரை அனைத்தும் கழன்டு, கீழே விழும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் பயணிகள் உயிர் பயத்துடன் அரசு பேருந்துகளில் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, திருவண்ணாமலை வரை செல்லக்கூடிய அரசு பேருந்தினை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்த போது, பேருந்து ஸ்டார்ட் ஆகாததால், பயணிகள் மற்றும் நடத்துனர் என அனைவரும் ஒன்று சேர்ந்து, பேருந்தை தள்ளிக் கொண்டு, ஸ்டார்ட் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பேருந்துக்காக வந்த பயணிகளை கொண்டு, அரசு பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்யும் அளவிற்கு, அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு இல்லாமல், காலாவதி ஆகிவிட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.