இருளில் மூழ்கிய விராலிமலை அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி

இருளில் மூழ்கிய விராலிமலை அரசு மருத்துவமனை நோயாளிகள் அவதி
விராலிமலை 
விராலிமலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக அரசு மருத்துவமனை இருளில் மூழ்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளகினர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமணையானது அருகில் உள்ள விராலூர் கொடிகால்பட்டி ராஜாளிப்பட்டி நம்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய அரசு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கத்தால் அதிக அளவில் காய்ச்சல் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு நோயாளிகள் உள் நோயாளிகளாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விராலிமலையைச் சேர்ந்த கார்த்திக் என்ற நோயாளி வயிற்று வலியால் அவதிப்பட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் கால தாமதமாகி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் புயலின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்திருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு உயிர்களை காப்பாற்றக்கூடிய அரசு மருத்துவமனையிலேயே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியதால் உயிர் போகாமல் அரசு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

Tags

Next Story